#
முக்கிய செய்திகள் மகனை கொன்ற தாய்:தானும் தற்கொலை செய்தார்

மகனை கொன்ற தாய்:தானும் தற்கொலை செய்தார்

சென்னை அடுத்துள்ள பரங்கிமலை பகுதியில் மகனை கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த பத்மா (வயது 35) எனும் பெண் கணவருடன் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக கண்பார்வை தெரியாத பரத் (13) என்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். எனினும் வறுமை தனியாக வாழ்ந்தமை போன்றவற்றால் விரக்தியுற்ற பத்மா தன்மகனையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் மகனை பிளாஸ்டிக் பையால் முகத்தில் இறுக்க கட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்யமுயன்ற போது மனம் மாறியதால் மகனை வைத்திய சாலையில் சேர்த்துள்ளார் ஆனாலும் அவர் முன்பே இறந்துவிட்டார் என்ற தகவ வர பரங்கிமலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறித்த வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த பத்மா மகன் இறந்ததால் மன அழுத்தத்தாள் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீசார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....